Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பௌர்ணமி தினத்தில் 300 வறுமை குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் படையினரால் வழங்கி வைப்பு

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அளித்த ஆலோசனையின் பேரில் சித்திரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 51 வது படைப்பிரிவு படையினர் உரும்பிராய் தெற்கு செல்வபுரம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு திங்கள்கிழமை (26) தலா ரூபா 1400 பெறுமதியான உலர் உணவு பொதிகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான சமைத்த மதிய உணவுப் பொதிகள் வழங்கினர்.

51 வது படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை தேர்ந்தெடுத்து வடக்கு . தெற்கு, மற்றும் படையினரின் ஆதாரத்தோடு சிவில் இராணுவ நல்லிணக்க திட்டமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த திட்டத்தின ஊடாக இப்பகுதியின் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பயன்பெற்றதுடன் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நிகழ்வு முன்னெடுக்கப்படடது.