Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2023 22:47:37 Hours

போர் பயிற்சி பாடசாலையில் 'சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழில் அபிவிருத்தி' பாடநெறி - 47 நிறைவு

அம்பாறையில் உள்ள போர் பயிற்சி பாடசாலையின் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் 'சிரேஷ்ட தலைமைத்துவம் மற்றும் தொழில் அபிவிருத்தி' பாடநெறி - 47 வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 13) சான்றிதழ் வழங்கும் நிகழ்வுடன் நிறைவடைந்தது.

இராணுவத்தில் உள்ள பல்வேறு படையணிகளை சேர்ந்த 53 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள போர் பயிற்சி பாடசாலையில் ஒரு மாத கால பாடநெறியினை பயின்றனர். இராணுவ புலனாய்வு படையணியின் சார்ஜன் ஆர்.எம்.சி.எஸ் பண்டார பாடநெறியின் சிறந்த மாணவராக விருது பெற்றார்.

சான்றிதழ் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக போர் பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் எம்கேஏடி சந்திரமால் கலந்து கொண்டு சிறப்பித்தார். லெப்டினன் கேணல் டப்ளியுஎம்எம்டப்ளியுபிஎச்ஜி பிடவல ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.