24th January 2025 17:31:00 Hours
பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் 2025 ஜனவரி 22 ம் திகதி அம்பாறை போர் பயிற்சி பாடசாலையின் தளபதியாக கடமை பொறுப்பேற்றார்.
வருகை தந்த புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் மறைந்த போர் வீரர்களின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தியதுடன், மாங்கன்று நாட்டினார். பின்னர் குழு படம் எடுத்துகொண்டார். அத்துடன் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அவர் தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
நிகழ்வின் இறுதியில் படையினருக்கு உரையாற்றிய அவர் அனைத்துப் நிலையினருடனான தேநீர் விருந்தில் கலந்துகொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.