Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2021 20:30:07 Hours

போர் கருவி வாகனப் பிரிகேட் தளபதிக்கு இராணுவ தளபதி பாராட்டு

இலங்கை போர் கருவி படையின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் தாரக ரத்னசேகர, மூன்று தசாப்தங்களுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த பின்னர் ஓய்வு பெறுவதையிட்டு, ஓய்வுபெற்ற தினத்தன்று பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் திங்களன்று (19) இராணுவ தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவரது சேவைகளுக்காக பாராட்டப்பட்டார்.

இதன் போது இராணுவத் தளபதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பான சேவைகளைப் பாராட்டியதோடு கவசப் படை அவரது தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலில் மறுமலர்ச்சி கண்டிருந்ததையும் தளபதி நினைவுகூர்ந்தார்.

மேற்படடி சந்திப்பின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா மேஜர் ஜெனரல் ரத்னசேகர வகித்த முக்கிய நியமனங்கள் தொடர்பில் நினைவுகூர்ந்ததோடு, போர் கருவி படையின் அவர் ஆற்றிய விஷேட சேவைகளையும் பாராட்டினார்.

இதன்போது ஓய்வுபெறும் அதிகாரியால் நினைவுகளை பகிர்ந்துகொண்டதையிட்டு இராணுவ தளபதிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இராணுவ தளபதியிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்புக்களுக்கும் அவர் நன்றிகளை தெரிவித்தார். சந்திப்பின் நிறைவம்சமாக ஓய்வு பெற்றுச் செல்லும் அதிகாரியை பாராட்டும் விதமாக இராணுவ தளபதியினால் சிறப்பு நினைவு பரிசு வழங்கி வைக்கப்பட்டது.