Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th February 2022 17:51:58 Hours

போரில் காயமடைந்த கஜபா படையணி வீரருக்கு வசதிகளுடன் கூடிய புதிய வீடு

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவுக்கமைவான “முன்னநகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020-2025” இற்கு அமைவாக போரில் வீரமரணம் அடைந்த போர்வீரர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுக்கும் பணிகள் நாடு முழுவதிலும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது.

அதற்கமைய இராணுவ தளபதி வீடமைப்பு திட்ட நிதி மற்றும் கஜபா படையணி நிதியை கொண்டு இப்பாகமுவ, பான்கொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ரணவிரு கமவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு போர் வீரரின் குடும்பத்தாருக்கு இன்று (13) காலை வழங்கி வைக்கப்பட்டது.

கஜபா படையணியின் தளபதியும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததோடு, 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய வீடு பயனாளியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி வீரர் 1990 ஆம் ஆண்டில் திருகோணமலையில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளின் போது வலது காலின் முழங்காலுக்கு மேல் பகுதியை இழந்திருந்ததோடு, அவர் இரு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைகளின் தந்தையாவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

போரில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த கஜபா படையணி வீரர் மருத்துவரீதியாக சேவை அனுமதிபெற்ற நிலையில் காயமடைந்த வீரரொருவருக்கான வசதிகளை கொண்ட வீடொன்று இல்லாத நிலையில் நெருக்கடிக்களுக்க முகம்கொடுத்து வந்தமையை கருத்திற் கொண்டு கஜபா படையணியின் மேற்படி வீரருக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்துக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி 7 (தொ) வது கஜபா படையணியின் படையினர் கஜபா படையணியின் நிதியின் மூலம் தனது ஆளணி வளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்தி புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இதன்போது பிரதம விருந்தினரான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு பயனாளி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் வெற்றிலை பாக்கு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வீட்டை வழங்கி வைப்பதற்கான வைபவங்கள் ஆரம்பமாகியிருந்ததோடு, மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் பிரதம அதிதியினால், வீட்டின் நினைவு படிகம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்ட பின்னர் மங்கள விளக்கேற்றல் மற்றும் பால் பொங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன்போது பயனாளிகளுடன் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா வீட்டுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சில பரிசுப் பொதிகளை வழங்கினார். அதேநேரம் இராணுவத் தளபதியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காயமடைந்த போர் வீரரின் உறவினர்கள் மற்றும் நலன் விரும்பிகளுடனும் கலந்துரையாடினார்.

மேற்படி வீட்டின் நிர்மாண பணிகள் நிறைவடையும் வரையில் கஜபா படையணியின் நிலையத்த தளபதி கேணல் ஷிரந்த மில்லகல மற்றும் 7 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இணைந்து படையினரை கண்காணித்தனர்.

143 வது பிரிகேடின் தளபதி கேணல் பௌமி கிச்சிலன் பாங்கொல்லவில் அமைந்துள்ள ‘அபிமன்சல 3’ தளபதி கேணல் அருண விஜேகுணவர்தன மற்றும் திட்டத்தின் பொறுப்பதிகாரி கேணல் பெணட் பொன்சேகா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் மேற்படி வீட்டை வழங்கி வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.