Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2020 22:00:29 Hours

போதைப்பொருள் பாவனையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

இராணுவத்தினரால் நிரவகிக்கப்பட்டு வரும் கல்கந்த தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தல் செயற்பாடுளை நிறைவு செய்த 25 போதைப்பொருள் பாவனையார்கள், பொலன்நறுவை நீதவான் நீதிமன்றத்தின் தீர்பின் பிரகாரம் புதன்கிழமை 06 ஆம் திகதி கண்டக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியதாக இனங்காணப்பட்ட நாகலன் விதிய மற்றும் தொட்டலங்க பிரதேசத்தினைச் சேர்ந்த குறித்த நபர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தளில் வைக்கப்பட்டனர். 233 ஆவது பிரிகேட் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி ஆர் எல்விட்டிகல அவர்கள் முயற்சியுடன் , குறித்த நபர்கள் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம், அவர்களை சமுதாயத்தில் நற்பிரஜைகளாக மாற்றி அவர்களின் குடும்பத்துடன் இணைக்கும் முகமாக இம் முயற்சியானது , கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் பிரகாரம் எடுக்கப்பட்டது.

மனிதாபிமானமான செயற்பாட்டினை கருத்திற் கொண்டு, பிரிகேடியர் ஆர் எல்விட்டிகல அவர்கள் சட்ட விதிமுறைகளின் பின்னர் குறித்த 25 நபர்களையும் புனர்வாழ்வு நிலையத்தில் அனுப்பி வைத்தார். பல தொழில் புரிவதற்கு ஏதுவாக 8 மாத கால புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். Running sports | Air Jordan Release Dates Calendar