Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th August 2021 19:44:28 Hours

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் படையினருக்கு பயிற்சி பட்டறை

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள கட்டளை அலகுகளின் அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவி அணியினருக்கு போதைப்பொருள் ஒழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிலான பயிற்சி பட்டறையொன்று திங்கட்கிழமை (2) பனாகொடையில் உள்ள இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி பயிற்சி பட்டறையானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

மேற்படி தரமான பயிற்சி பட்டறையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளடங்களாக 375 படையினர் முறையான சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.

மேற்படி நிகழ்வு கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கான போதைப்பொருள் பாவனை ஒழிப்பு தொடர்பான பணிப்பாளர் திரு கோசல தொடவத்த அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டது.