13th September 2023 20:03:26 Hours
விஷேட படையணியின் பிரிகேடியர் டபிள்யூ.எம்.பீ.எம் விஜேசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் (செப்டம்பர் 11) அன்று இராணுவ தலைமையகத்தின் போக்குவரத்து பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பணிப்பகத்தின் பல அதிகாரிகளின் முன்னிலையில் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இட்டு அவர் புதிய பதவியினை ஏற்றுக்கொண்டார்.
அவர் தற்போது 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் கேஎல்எஸ்எஸ் லியனகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு பதிலாக இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் டபிள்யூ.எம்.பீ.எம் விஜேசூரிய ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணியாக கடமையாற்றினார்.