19th December 2021 21:15:14 Hours
பொலன்னறுவையில் பல மாதங்களுக்கு முன்பாக இடம்பெற்ற “கம சமக பிலிசந்தரக்” நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதியவர்களினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கமைவாக 12 (தொ) பொறியியல் சேவை படையணியினரால் பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் நிர்மாண பணிகள் ஜூலை 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
அதிமேதகு ஜனாதிபதியவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” தேசிய கொள்கையின் கீழ் கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் நாடளாவிய ரீதியில் விளையாட்டுதுறைசார் அடிப்படை கட்டமைப்புக்களை மேம்படுத்தும் செயற்பாடுகளின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியவர்களினால் இராணுவத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதம கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர ஆகியோரின் வழிகாட்டலுக்கமைய பொறியியல் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் அசங்க பெரேரா அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற்படி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மாணவர்களுக்கான விடுதி மற்றும் சுகாதார தொகுதியை மறுசீரமைத்தல் போன்ற விடயங்களே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருந்ததோடு, திட்டத்துக்கான நிதி கிராமிய மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.