Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பொறியியல் மற்றும் சிங்கப் படைகள் ‘ஏ’ பிரிவில் பிரகாசிப்பு

இராணுவ கிரிகட் குழுவின் ஏற்பாட்டில் இராணுவ படையணிகளிடையேயான ஏ பிரிவு கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி (50 ஓவர்) வியாழக்கிழமை (08) பனாகொடை ‘முத்துகுமரு’ மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் இலங்கை பொறியியல் படை மற்றும் சிங்கப் படை அணிகள் இலேசாயுத காலாட் படை மற்றும் பீரங்கி படை அணிகளை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு களமிறங்கினர். இப்போட்டியில் இலங்கை சிங்கப்படை நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி 49.1 ஓவர்களில் 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹசன் சந்தீப்பான 38 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், லெப்டினன் ஓமேஷ் வித்தியாரத்ன 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

மேலும் இந்த போட்டித் தொடரில் 10 அணிகள் பங்கேற்றிருந்ததுடன், அவற்றில் தேசிய அணியின் வீரர்களும் பங்கேற்றிருந்தனர். இத்தொடர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி பனாகொட - முத்துக்குமரு மைதானத்தில் ஆரம்பித்திருந்ததோடு, மத்தேகொட பொறியியலாளர்கள் கிரிகெட் மைதானம் மற்றும் தொம்பேகொட இலங்கை போர்க் கருவி படையணியின் மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் இடம்பெற்றன.

இதன்போது இறுதிப் போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை பொறியியல் படையினர் 44.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 191 ஓட்டங்களை பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தனர்.

பொறியியலாளர் சித்துமின ஏக்கநாயக்க 119 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்களையும் பொறியியலாளர் ஹேஷான் ஹெட்டியராச்சி 25 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பொறியியலாளர் கிரிக்கெட் அணி 2013 ஆம் ஆண்டில் பெரும்பான்மையான மென்பந்து கிரிகெட் வீரர்களுடன் உருவாக்கப்பட்டது. அவர்கள் சகலரும் படையணிகளுக்கிடையிலான “பி” பிரிவில் விளையாடி எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை.

இருப்பினும் பிற்காலத்தில் அவர்கள் 2018 ஆம் ஆண்டு “பி” பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்றனர், அதனையடுத்து 2019 ஆம் ஆண்டு முதல் பொறியியல் அணியினர் “ஏ” பிரிவில் விளையாட தகுதி பெற்றிருந்ததுடன், இலங்கை பொறியியல் படையணி அணி சிங்கப் படை அணியிரை பின்தள்ளி அதிக ஓட்டங்களை குவித்தனர்.

புள்ளிகளின் விபரம்:

இலங்கை சிங்கப்படை - 190 (49.1 ஓவர்கள்)

லான்ஸ் கோப்ரல் ஹேமல் கோரத்தொட்ட 70 (111)

ரைபிள்மேன் மயூரா விஜேசிங்க 29 (33)

பொறியியல் ஹஷன் சந்தீபன 5/38 (10)

லெப்டினன்ட் ஒமேஷ் வித்யாரத்ன 2/33 (9)

இலங்கை பொறியியல் படையணி - 191/4 (44.4 ஓவர்கள்)

பொறியியலாளர் சித்துமின ஏக்கநாயக்க 64 * (119)

பொறியியலாளர் ஹெஷன் ஹெட்டியாராச்சி 35 * (25)

லெப்டினன்ட் ஒமேஷ் வித்யாரத்ன 29 (41)

ரைபிள்மேன் மயூரா விஜேசிங்க 3/21 (9)

ரைபிள்மேன் யொஹன் கல்ஹார 1/29 (7) Running sport media | Saucony Lanzar JAV 2 - Unisex , Worldarchitecturefestival