13th November 2023 20:28:05 Hours
இராணுவ பொறியியல் படையணி தனது 72 வது ஆண்டு விழாவை மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் நவம்பர் 7-10 திகதிகளில் பனாகொட இராணுவ பொறியியல் படையணி தலைமையகத்தில் கொண்டாடியது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியும் இராணுவ பொறியியல் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் ஆண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இராணுவ பொறியியல் படையணி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (7) போர்வீரர்களின் நினைவுத்தூபியில் வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், இராணுவ பொறியியல் படையணியின் படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்த பொறியியல் படையினரின் நினைவாக மலரஞ்சலி செலுத்தினர்.
இரவு முழுவதும் ‘பிரித்’ பாராயணம் இடம் பெற்றதுடன், மறுநாள் மகா சங்க உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இராணுவ சம்பிரதாயங்களின்படி, இராணுவ பொறியியல் படையணியின் படைத் தளபதிக்கு வியாழன் (9) அன்று படையணி தலைமையகத்தில் வண்ணமயமான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், அன்று கட்டான ‘முப்படை வீரர்களின் இல்லத்தில்’ வசிக்கும் 22 பேருக்கு மதிய உணவு மற்றும் பொழுதுபோக்கு இசை நிகழ்ச்சியும் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மத்தேகொட படையணி தலைமையக சப்பர்ஸ் ஓய்வு விடுதியில் அதிகாரிகள் ஒன்றுகூடலும் படையணி தலைமையகத்தில் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் ஒன்று கூடலுடன் ஆண்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் இராணுவ பொறியியல் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.