Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2024 16:16:03 Hours

பொறியியல் படைப்பிரிவின் தளபதி 7 வது இலங்கை பொறியியல் படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2024 மார்ச் 15 ம் திகதி மின்னேரியா 7 வது களப் பொறியியல் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியின் வாகன தொடர் அணிக்கு படையினர் மரியாதை செலுத்தியதுடன் 7 வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

கட்டளை அதிகாரி மற்றும் ஏனைய அதிகாரிகள் படைப்பிரிவின் பங்கு மற்றும் பணிகள், நிறுவன அமைப்பு, வலிமை, பயிற்சி, நிர்வாகம் மற்றும் வழங்கல் தொடர்பான விரிவான விளக்கங்களை நடத்தினர். பின்னர், படைப்பிரிவின் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தின் போது அனைவருடனும் கலந்துரையாடினார்.

163 பணிமனை உட்பட படையலகு வளாகத்தின் ஆய்வுடன் நிகழ்வு நிறைவுற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.