Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th April 2024 11:44:53 Hours

பொறியியல் படைப்பிரிவின் தளபதி 6 வது களப் பொறியியல் படையணிக்கு விஜயம்

பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 2024 மார்ச் 28 அன்று 6 வது களப் பொறியியல் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார் .

6 வது களப் பொறியியல் படையணிக்கு வருகை தந்த படைப்பிரிவு தளபதியை படையலகு படையினரால் வாகன தொடர் அணிக்கு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரியை கட்டளை அதிகாரி மேஜர் ஆர்எம்எல்எ ரத்நாயக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்று 6 வது பொறியியல் படையணியின் செயல்பாடுகள் தொடர்பான விளக்கத்தை வழங்கினார்.

நிகழ்வின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில், படையணியின் அங்கத்வர்களுடன் குழு படம் எடுத்துகொண்டதுடன் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டுவைத்தார். இதனைத் தொடர்ந்து படைப்பிரிவின் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துக்கொண்டார்.

பின்னர் முகாம் கள விஜயத்தையும் மேற்கொண்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.