28th August 2023 22:27:18 Hours
மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள், ஓகஸ்ட் 24 அன்று பனாகொடை பொறியியல் சேவைப் படையணியில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் படைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த படைத் தளபதியை, பொறியியல் சேவை படையணியின் நிலையத் தளபதி கேணல் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சி பீடிஎஸ்சி அவர்களால் பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டதை தொடர்ந்து மரியாதையுடன் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து அவர் நினைவுச் தூபியில் உயிரிழந்த பொறியியல் சேவை படையணியின் போர் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு, இராணுவ மரபுகளின்படி, வருகை தந்த படைத் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், பொறியியல் சேவை படையணியின் படைத் தளபதி, தனது புதிய அலுவலகத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக, உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். மேலும் படையணியின் நுழைவாயிலில் குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், வளாகத்தில் மாங்கன்று ஒன்றையும் நட்டார்.
மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு ஆற்றிய உரையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சேவைகள் மற்றும் கடமைகளை எடுத்துக்காட்டினார்.
அன்றைய நிகழ்வுகளின் முடிவில், புதிய படைத் தளபதி அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு படையினருடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.