Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th November 2024 14:35:40 Hours

பொறியியல் சேவைகள் பணிப்பக பணிப்பாளர் இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம்

பொறியியல் சேவைகள் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சி பீடீஎஸ்சி அவர்கள் 2024 நவம்பர் 22 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் எஸ்ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் அன்புடன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து, இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், நிறுவனத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்த விளக்கக்காட்சியை நடத்தினார்.

அதன்பின், நிறுவன வளாகத்தில் நடைபெற்று வரும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை உயர் அதிகாரி ஆய்வு செய்தார்.

இவ் விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.