Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2021 07:12:57 Hours

பொறியியலாளர்கள் படையினரால் இரண்டு நீர்பாசன குளங்கள் புனரமைப்பு

ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு ” கொள்கை திட்டத்தின் கீழ், நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மகாவலி அதிகார சபையினால் இராணுவத்திற்கு ஒப்படைக்கப்பட்ட மேலும் இரண்டு நீர்ப்பாசன களங்களின் புனரமைப்பு பணிகளானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக மகாவலி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெலிஓயா பிராந்தியத்தில் உள்ள மஹாவெலி எல் பகுதியில் மோனாரா வெவா மற்றும் எத்தவெதுன வெவா என்ற பெயரிடப்பட்ட இரண்டு சீரமைப்பு திட்டங்கள் முடிவடைந்த பின்னர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட 10 குளங்களில் இன்னும் நான்கு குளங்களின் சீரமைப்பு திட்டங்கள் முடிக்கப்பட்டு மகாவலி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அந்த மறுசீரமைப்பு திட்டங்கள் லெப்டினன்ட் கேணல் கிரிஷாந்த புஸ்ஸேவெல அவர்களின் தலைமையில் 11 வது கள இலங்கை பொறியாளர்கள் படையணியினால் மேற்கொள்ளப்பட்டது மற்றும் இந்த குளங்களின் சீரமைப்பு திட்டங்களுக்கு மகாவலி அதிகார சபை நிதியளித்துள்ளது.

தலைமை கள பொறியாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் பொறியாளர் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், பிரிகேடியர் அனுருத்த செனவிரத்னாவின் கட்டளையின் கீழ் ஆலை பொறியாளர் படைப்பிரிவால் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டன.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தேசிய கட்டுமானப் பணிகளில் ஒன்றான இந்தத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த இரண்டு மோனார வெவா மற்றும் ஈதவெதுன வெவா பாசனத் குளங்களை புனரமைத்தால் 300 ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் பயனடையும்.