Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2017 17:41:40 Hours

பொப்பி மலர் நிகழ்வு

இலங்கை முன்னாள் இராணுவ சேவை சங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தும் பொப்பி மலர் நிகழ்வு இன்று காலை 11 ஆம் திகதி கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் இடம்பெற்றது.

பாராளுமன்ற சபாநாயகர் கௌரவத்திற்குரிய கரு ஜயசூரியஅவர்கள் பிரதம அதிதியாக இந் நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பு உரையை ஆற்றினார்.

இந் நிகழ்வானது உலகப் போர்களின் போது கொல்லப்பட்ட அனைத்து யுத்த வீரர்களை நினைவு படுத்தும் முகமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இன்றைய நிகழ்வின் போது பொப்பி நடைபணி அணிவகுப்பு இடம்பெற்றது. ஆரம்ப வாரத்தில் ஜனாதிபதி செயலகத்தில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு பொப்பி மலர்களை வழங்கி பொப்பி மலர் வாரத்தை ஆரம்பித்தனர். அத்துடன் பொப்பி மலர்கள் இவ்வாரத்தில் பொது மக்களுக்கு விற்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த அதிதிகள் மற்றும் முன்னாள் மூத்த முப்படை அதிகாரிகளை முன்னாள் இராணுவ சங்கத்தின் தலைவர் (ஓய்வு பெற்ற) கே.ஏ. ஞானவீர அவர்கள் வரவேற்றார்.

இரண்டாவது உலகப் போர் மற்றும் பிற நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த யுத்த வீரர்களின் நினைவாக ஓரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அனைத்து மத ஆசிர்வாத ஆனுஷ்டானங்கள் இடம்பெற்றன.

பொப்பி மலர் நிகழ்வின் போது நினைவு துாபிக்கு பாராளுமன்ற சபாநாயகர் ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ,பாதுகாப்பு செயலாளர், முப்படைத் தளபதிகள், துாதுவர்கள், அரசாங்க அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், மாணவ சிப்பாய் படையணி, உயிர் நீத்த படை வீரர்களது குடும்பத்தார் மலரஞ்சலிகளை செலுத்தி கௌரவித்தனர். அத்துடன் லாஸ்ட்போட் ட்ரம்பட் வாத்திய ஓசையும் இசைத்து கௌரவிக்கப்பட்டன.

Buy Sneakers | Nike