Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2021 22:41:01 Hours

பொது பணி பணிப்பாளர் நாயகம் வெடிபொருள் களஞ்சியத்தை ஆராய்ந்ததுடன் வன்னி தளபதியை சந்தித்தார்

இராணுவ தலைமையகத்தின் பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ வன்னி பாதுகாப்பு படை தலைமையகம் தளபதியை வியாழக்கிழமை (06) சந்தித்ததுடன் மத்திய வெடிபொருள் மற்றும் ஆயுத களஞ்சியத்தை பார்வையிட்டார்.

வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு விஜயம் செய்த போது ஜெனரல் பிரியங்கர பெர்னாண்டோ அவர்களை வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாராவுடன் வெடிபொருள் களஞ்சியங்கள் மற்றும் எதிர்கால கட்டுமான திட்டம் குறித்து கலந்துரையாடினர். பின்னர் அவர்கள் இருவரும் வன்னி பாதுகாப்பு படை தலைமையகம் முகாமுக்குள் வெடிபொருள் சேமிப்பதை உன்னிப்பாக அவதானித்தனர்.

இராணுவ தலைமையகம் செயற்பாட்டுப் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ரன்வீர மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகள் இதன்போது பங்குபற்றினர்.