Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th August 2022 13:58:27 Hours

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் தாயகம் திரும்பினார்

பர்மிங்காம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் (55 கிலோ) பளுத்தூக்கும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணின் கோப்ரல் வை.டி.ஐ குமார தனது பயிற்றுவிப்பாளர் திரு. ருக்ஷன் குணதிலகவுடன் வியாழக்கிழமை (12) தாய்நாடு திரும்பினார்.

பண்டாரனயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் கேணல் ஸ்ரீநாத் கால்லகே, விளையாட்டுப் பணிப்பக கேணல் விளையாட்டு லெப்டினன் கேணல் புத்திக ஜயசூரிய, விளையாட்டுப் பணிப்பக பணிநிலை அதிகாரி I (விளையாட்டு ) லெப்டினன் கேணல் மஞ்சுள சுபசிங்க, இராணுவ பளுதூக்குதல் குழுவின் செயலாளர், இலங்கை பளு தூக்குதல் சம்மேளனத்தின் தலைவர் திரு எச்.பி.ஏ.ஆர் பண்டார, தேசிய பயிற்சியாளர் திரு ஆர்.பீ விக்ரமசிங்க, விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திரு அமல் எதிரிசூரிய மற்றும் பதக்கம் வென்ற உறவினர்கள் உட்பட பலர் அன்புடன் வரவேற்றனர்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், இராணுவம் மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியவற்றின் பெருந்தன்மைக்கு நன்றி தெரிவித்த அவர், எதிர்கால நிகழ்வுகளில் தங்கம் வெல்வதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.