Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2020 12:00:33 Hours

பேரழிவை தணிக்கும் திட்டம் தொடர்பாக திருமலையில் கலந்துரையாடல்

இம் மாதம் 13 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள 22 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் இப்படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களது தலைமையில் ‘ பேரழிவை தணிக்கும் திட்டம்’ தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது மாவட்டத்திற்கான பேரழிவு தணிப்பு திட்டம் குறித்து விரிவான விளக்கங்கள் தொடர்பாக அந்தந்த படைத் தளபதிகளினால் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. இந்த கலந்துரையாடலில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sportswear Design | adidas Campus 80s South Park Towelie - GZ9177