Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2023 07:40:16 Hours

பெரியபண்டிவிரிச்சனில் கிறிஸ்மஸ் கரோல் கீத நிகழ்வுகள்

65 வது காலாட் படைப்பிரிவின் 653 வது காலாட் பிரிகேடின் 4 வது கஜபா படையணியின் படையினர் அண்மையில் மடு பிரதேசத்தில் உள்ள பெரியபண்டிவிரிச்சான் அரச பாடசாலையில் நத்தார் கரோல் கீத நிகழ்வினை கத்தோலிக்க சமூகத்தினரிடம் நடத்தினர்.

பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் ஒருமைபாட்டினையும் வளர்க்கும் நோக்கில் 65 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க மரியகொத்தி தேவாலயத்தில் கரோல் கீதங்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பாடுவதற்கு மதகுருமார்களுடன் கலந்தாலோசித்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

முதன்முறையாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதுடன் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற பிள்ளைகளுக்கும், கரோல் கீத நிகழ்வுகளை பார்வையிட்ட பிள்ளைகளுக்கும் உணவுபொருட்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

653 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாமல்சேரசிங்க அவர்கள், 4 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி மேஜர் டப்ளியு டி எ உதயகுமார மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர், மடு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கரோல் கீத நிகழ்வினை கண்டுமகிழ்ந்தனர்.