Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 17:00:00 Hours

பெங்கொங் ஆசிய தடகள சாம்பியன்ஷிபில் இராணுவ வீராங்கனைகளுக்கு தங்கம் மற்றும் வெண்கலம்

தாய்லாந்தின் பெங்கொங்கில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - 2023 போட்டிகளில் 400 மீ ஓட்டப் போட்டியில் (பெண்கள் பிரிவு) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் நதீஷா ராமநாயக்க வியாழக்கிழமை (13) இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை வென்றார்.

கோப்ரல் நதீஷா ராமநாயக்க ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற 8வது இலங்கை வீராங்கனையாக வரலாற்றில் இணைந்தார், இப் போட்டி தொடரானது பெங்கொங்கின் சுபச்சலசாய் தேசிய விளையாட்டு மைதானத்தில் ஜூலை 12-16 வரை நடைபெற்றுகின்றது. மேலும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வெல்லப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக அரையிறுதிப் போட்டியை 53.06 வினாடிகளில் முடித்த கோப்ரல் நதீஷா ராமநாயக்க, பெண்களுக்கான போட்டியில் 52.61 வினாடிகளில் வெற்றிப் பதிவு செய்தார்.

இந்தப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி 8 இராணுவ வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

அதேபோன்று, இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எச்எல்என்டிலெகம்கே ஈட்டி எறிதல் (பெண்கள் பிரிவு) நிகழ்வில் புதிய இலங்கை சாதனையை (60.93 மீ) நிலைநிறுத்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.