Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2017 15:42:02 Hours

பூநகரியில் இராணுவத்தினரால் ‘யோகா’ பயிற்சிகள்

பூநகரி பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கமைய 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியா மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான அவர்களின் ஏற்பாட்டில் மனநலம் மற்றும் ஆன்மீக நலத்திட்டங்களை ஊக்குவிப்பதற்காக இரண்டு நாட்கள் இந்த யோகா பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழிக்காட்டலில் ‘யோகா மற்றும் ரிலாக்சேஷன்ஸ்’ கருத்திட்டத்தின் கீழ் நவம்பர் மாதம் 7, 8 ஆம் திகதிகளில் பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றன.

யோகா பயிற்றுவிப்பாளரான ஜோகி லீலாநந்தா விக்ரமாராச்சி அவர்களின் விரிவுரையுடன் பிரதேச செயலக ஊழியர்கள் 55 பேரின் பங்கேற்புடன் இந்த பயிற்சிகள் இடம்பெற்றன.

இரண்டாம் நாள் பயிற்சி அமர்வுகளின் போது பயிற்சிவிப்பாளர் மற்றும் பயிற்சியாளர்களின் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

பூநகரி பிரதேச செயலாளர் திரு. சி.சி கிருஸ்னேந்திரன் அவர்கள் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிக்கு உத்தியோக பூர்வமாக விடுத்த வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் இந்த யோகா பயிற்சி ஒழுங்குகள் செய்யப்பட்டன.

இப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் வளர்த்து கொள்வதற்காக,இந்த திட்டம் இராணுவத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

Nike Sneakers Store | nike fashion