06th April 2023 18:30:43 Hours
வரவிருக்கும் பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டங்களுடன் இணைந்து இராணுவ கிறிஸ்தவ சங்கம் பாதிரியார்களின் ஒத்துழைப்புடன், பத்தரமுல்லை, பெலவத்தையில் உள்ள புனித ஜென் டால் பஸ்டோன் தேவாலயத்தில் 'சிலுவையின் வழி' ஆன்மீக பிரார்த்தனையை செவ்வாய்க்கிழமை (04 ஏப்ரல் 2023) முன்னெடுத்தது.
இராணுவ கிறிஸ்தவ சங்க தலைவரும் நிதி முகாமைத்துவ பணிப்பக பணி்ப்பாளர் மற்றும் இலங்கை இராணுவ கால்நடை மற்றும் விவசாய படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, இராணுவ கிறிஸ்தவ சங்க செயலாளரும் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதியுமான மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் இராணுவ கிறிஸ்தவ சங்க உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தவக்காலத்தின் பல முன்முயற்சிகளில் ஒன்றான பிரார்த்தனை அமர்வு, கிறிஸ்துவின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தினையும் 'சிலுவை வழி' நிகழ்ச்சியின் மூலம் பிரதிபலிக்கிறது. புனித ஆராதனையை இராணுவப் பாதிரியார் அருட்தந்தை நோயல் டயஸ் அவர்கள் நிர்வகித்தார். மேலும், இந்த சேவையின் மூலம், இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர், இயேசு கிறிஸ்துவின் பேரார்வத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தவக்காலத்தில் தங்கள் மனதை நிதானப்படுத்தி, ஆன்மீக ரீதியில் தங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இந் நிகழ்வின் முடிவில் மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்கள் 'சிலுவை வழி' மற்றும் தேவாலயத்தில் அனைத்து விடயங்களையும் வழிநடத்தியதற்காக இராணுவப் பாதிரியார் அருட்தந்தை நோயல் டயஸ் மற்றும் ஏனைய பாதிரியார்களுக்கு சிறப்பு நன்றி கூறியதோடு அனைத்து இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆசீர்வாதங்களை வேண்டினார்.