Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2024 13:04:40 Hours

புனித மேரி தேவாலயத்தில் பக்தர்களுக்கு படையினரால் சிற்றுண்டி

52 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஆர் பத்திரவிதான அவர்களின் வழிகாட்டல் மற்றும் 522 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூகேஎஸ்பீஎம்ஆர்ஏபி தொடம்வல அவர்களின் மேற்பார்வையில் 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்எச் சுதுசிங்க அவர்கள் படையினருடன் இணைந்து நத்தார் தினத்தன்று கடைக்காடு புனித மரியாள் தேவாலயத்தில் சமூக நலன்புரி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

புனித நாளில் தேவாலயத்திற்கு வருகை தந்த 750 பக்தர்களுக்கு 23 வது கெமுனு ஹேவா படையணி, 1 வது இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி ஆகியவற்றின் படையினர் சிற்றுண்டிகளை வழங்கினர்.