Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 19:04:02 Hours

புனித பீட்டர்பேக் பீராங்கி படை கல்வியற் கல்லூரியின் அதி உன்னத கௌரவமாக இலங்கை இராணுவ தளபதிக்கு பீரங்கி இயக்க வாய்ப்பு

ரஸ்ய கூட்டரசின் பாதுகாப்பு அமைச்சின் ஜெனரல் ஓலெக் சல்யுகோவ் அவர்களின் அழைப்பின் பேரில் தற்போது ரஷ்யாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா வியாழக்கிழமை (28) 1855 ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள், அறிஞர்களை கொண்டு பீரங்கி பயிற்சிகளை வழங்குவதற்காக சென் பீட்ரஸ்பேர்க் நகரில் ஸ்தாபிக்கப்பட்ட புகழ்மிக்க (Mikhailovskaya Military Artillery Academy) மிகைலோவ்ஸ்கயா இராணுவ பீரங்கி கல்லூரிக்கு சுற்றுப்பயணம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார். இதன்போது இலங்கை இராணுவ தளபதிக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ரஷ்யவிற்கான மிகைலோவ்ஸ்கயா இராணுவ பீரங்கி கல்லூரியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அதற்கமைவாக இலங்கை இராணுவ பீரங்கி படையின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த சுற்று பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

மிகைலோவ்ஸ்கயா இராணுவ பீரங்கி கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை அக்கல்லூரியின் தளபதி லெப்டினண் ஜெனரல் பக்கனீவ் செர்ஜி அனடோலிவிச் உற்சாக வரவேற்பளித்ததன் பின்னர் சிரேஷ்ட, கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் கட்டளை தளபதி ஆகியோருக்கு பீரங்கி பற்றிய அறிவு திறன்களை மேம்படுத்த இக்கல்லுரியில் பயிற்சி வழங்கு விதம் குறித்து அவதானித்தார்.

இக்கல்லூரிக்கு விஜயம் மேற்கொள்ளும் உயர் அந்தஸ்துடைய நபர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்கும் அதியுயர் கௌரவமரியாதையான பீரங்கி துப்பாக்கி சூடு வழங்கல் மிகைலோவ்ஸ்கயா இராணுவ பீரங்கி கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை இராணுவ தளபதிக்கும் வழங்கப்பட்டது.

அதேபோல், எரிபொருள் சேமிப்பில் சுற்றாடலுக்கு பாதிப்பற்ற வகையில் பீரங்கி துப்பாக்கி சூடு நடத்தும் முறை பற்றி பயிற்சிக்கு உருவாக்கப்பட்டுள்ள விதம் தொடர்பிலும் எடுத்துரைத்தனர். அதில் ஏனைய தொழில்நுட்ப பிரிவுகளின் வெவ்வேறான செயற்பாடுகள் தொடர்பிலும் கல்லூரி தளபதி மற்றும் ஏனைய சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளால் இலங்கை இராணுவ தளபதிக்கு விபரிக்கப்பட்டது.

இலங்கை இராணுவ தளபதி பீரங்கி கல்லூரி வளாகத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் அக்கல்லூரி தளபதி லெப்டினண் ஜெனரல் பக்கனீவ் செர்ஜி அனடோலிவிச்க்கு இவ் விஜயத்தை நினைவுகூரும் வகையில் இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு விஷேட நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கினார். அதனை தொடர்ந்து இலங்கை இராணுவ தளபதியும் கல்லூரி தளபதிக்கு விஷேட நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கினார்.

விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை தூதுக்குழுவில் இராணுவத் தளபதிக்கு மேலதிகமாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் மேலும் மூன்று இராணுவ வீரர்கள் அடங்குகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஸ்ய பீரங்கி படை உலகில் முதன்முதலில் மூடிய நிலையில் இருந்து தாக்கும் முறைகளை உருவாக்கியிருந்ததோடு, ரஷ்ய-ஜப்பானியப் போரின் போது அவற்றை நடைமுறையில் சாதித்த பெருமையையும் கொண்டுள்ளது.