Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2023 17:39:09 Hours

புனானி படைப்பிரிவின் தளபதியின் நிலை உயர்வுக்கு இராணுவ மரியாதை

புனானி 23 வது காலாட் தலைமையகத்தில் புதிதாக நிலை உயர்வு பெற்ற படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுக்கு சனிக்கிழமை (செப்டம்பர் 16) 23 வது காலாட் படைப்பிரிவில் இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க மரியாதை வழங்கப்பட்டது. அவர் சமீபத்தில் மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

23 வது காலாட் படைப்பிரிவுக்கு வருகை தந்த படைப்பிரிவு தளபதிக்கு பிரதான நுழைவாயிலில், 9 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின், நிலை உயர்வு பெற்ற படைப்பிரிவு தளபதி படைத் தலைமையக வளாகத்தின் முன் நிகழ்வின் நினைவாக மாங்கன்று நட அழைக்கப்பட்டார்.

பின்னர், மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 23 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் படையினருக்கு உரையாற்றினார். தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

23 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் உள்ள அனைத்து பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.