Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2021 17:42:01 Hours

புனரமைக்கப்பட்ட தொண்டர் படையணி தலைமையகத்திற்கு புதிய நுழைவாயில் வளைவு

இலங்கை இராணுவ தொண்டர் படையின் புதிதாக புதுப்பிக்கப்பட்ட தலைமையக வளாகத்தின் நுழைவாயில் வளைவிற்கான அடிக்கல்லினை புதன்கிழமை (2) இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களால் நாட்டப்பட்டது.

சுப வேளையில் படைத் தளபதி மண்னை வெட்டி வேலையை ஆரம்பத்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி, மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்க, முதன்மை பணிநிலை அதிகாரி பிரிகேடியர் ரோஹித அலுவிஹரே மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஒரு சில சேவை உறுப்பினர்களும் கொவிட் 19 சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.