01st April 2021 15:17:15 Hours
கொவிட் - 19 வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன மற்றும் துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அமர்வு (01) நடைபெற்றது.
இதன்போது தொற்றாளர்களை இனம் காணும் போதான நடவடிக்கைகள், புதிய முன்னேற்றங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன். புதிய வைரஸ் பரவலை முகாமைத்துவம் செய்தல் நிர்வகித்தல், பொதுமக்களின் நடத்தைகள், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின்படி தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் வகையிலான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கொவிட் தடுப்புக்காக தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் வலியுறுத்தினார்.
அத்தோடு நாடளாவிர ரீதியில் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்ற போதிலும், சுகாதார அறிவுரைகளை வலுவாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய செயலணியின் தலைவர், அண்மையில் பண்டிகை காலம் வரவிருப்பதால் பாதுகாப்புச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக தக்கவைத்து கொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
அதனையடுத்து சீன தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேற்படி தடுப்பூசிகள் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமையவே கொண்டு வரப்பட்டதாகவும், அவை முதற்கட்டமாக இலங்கையில் வசிக்கும் சீனப் பிரஜைகளுக்கு செலுத்தப்பட உள்ளதுடன், சீன தூதரகத்துடன் இணைந்து அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் நாளை முதல் முன்னெடுக்கப்பட உள்ளதெனவும் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெற வேண்டிய 500,000 ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என்றும் இந்தியாவில் கொவிட் – 19 பரவல் உக்கிரமடைந்தன் காரணமாகவே அவை தாமதாகி கிடைப்பதாகவும், அவற்றை ஏற்றும்ப பணிகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் 13 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதாக ரஷ்ய அரசாங்கம் உறுதி அளித்துள்ளதாகவும் ஜூன் இறுதி வாரத்திற்குள் அவை கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் முழு தொகையும் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து உருவான கொத்தணிகள் பற்றி விளக்கமளித்த அவர், அந்த கொத்தணிகள் திறம்பட கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை அழைத்துவருவது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இதுவரையில் 130,000 இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்திலும் அந்த செயற்பாடுகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அலேச குணவர்தன் பண்டிகை காலங்களில் அன்றாட செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியதுடன் 9,27,000 தடுப்பூசிகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சபுகஸ்கந்த மற்றும் யாழ்ப்பாணத்தில் புதிய கொத்தணிகளின் தொடர்பாகவும் தெரிவித்தார்.மேலும்புத்தாண்டை கருத்தில் கொண்டு புதிய சுகாதார வழிக்காட்டல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். Nike air jordan Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov