28th May 2024 16:31:16 Hours
தென்மேற்கு பருவமழை ஆரம்பமானதுடன், புத்தளம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ததன் விளைவாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளின் இடம்பெயர்ந்த மக்கள் உணவு தேவை உட்பட பல சவால்களை எதிர்கொண்டனர்.
புத்தளம் பிரதேச செயலகத்தின் உதவி கோரிக்கைக்கு இணங்க, பாதிக்கப்பட்ட 400 பேருக்கு உணவு தயாரிப்பதற்காக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி.ஏ.ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 400 உணவுப் பொதிகள் தயாரிக்கப்பட்டு 2024 மே 20 அன்று புத்தளம் பிரதேச செயலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.