Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th November 2023 05:57:55 Hours

புத்தளம் - குருநாகல் பிரதான வீதியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு 16 வது கஜபா படையினர் உதவி

புத்தளம் மாவட்ட வன பரிபாலன அலுவலக பணிப்பாளர் விடுத்த வேண்டுகோளின்படி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சித் திட்டத்தில் கட்டளை அதிகாரி உட்பட 16 வது கஜபா படையணியை சேர்ந்த 40 படையினர் 2023 நவம்பர் 16 அன்று கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கல்லடி, புத்தளம்-குருநாகல் பிரதான வீதியின் இருமருங்கிலும் 400 புங்கை மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 143 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் நிகழ்வின் வெற்றிக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.