Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th February 2019 16:51:05 Hours

புதுபிக்கப்பட்ட இராணுவ விடுதி திறந்து வைப்பு

இலங்கை இராணுவ காலாட் படையணி தலைமையகம் பூஸ்ஸாவில் அவயங்களை இழந்த இராணுவ வீரர்களின் சுகாதார பாதுகாப்புக்காக புதுபிக்கப்பட்ட விடுதியானது (14) ஆம் திகதி வியாழக் கிழமை காலாட் படையணி தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ரூவான் குலதுங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இக் கட்டிடம் இராணுவ காலாட் படையணி தலைமையகத்தின் கட்டளை தளபதி லெப்டினன்ட் கேணல் ஆர்.எம்.எஸ். ராஜகருணா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 100 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டது.

இக் கட்டிடம் ஏர் கண்டிஷனிங் வசதி கொண்ட இந்த விடுதி அவயங்களை இழந்த இராணுவ வீரர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இப் கட்டிட பணிகள் முன்னாள் இராணுவ தளபதி சாந்த கோட்டகொட அவர்களின் துணைவியார் திருமதி சோனிக்கா கோட்டகொட மற்றும் காலாட் படையணியின் கேணல் ஏ.கே.டி.ஜே.ஜி.சிரிவர்தன (ஓய்வு) ஆகியோரால் நிதியுதவி வழங்கப்பட்டது.

நன்கொடையாளர்கள், கட்டளை தளபதிகள் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினரும் கலந்து கொண்டன. Best Authentic Sneakers | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK