25th July 2021 10:00:42 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 26 வது தளபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ள மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு சனிக்கிழமை (24) யாழ்ப்பாணத்திலுள்ள 55 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கான தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார்.
அத்தோடு பாதுகாப்புப் படைத் தளபதியை 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன அன்புடன் வரவேற்றதை தொடர்ந்து பிரதான நுழைவாயில் பகுதியில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கேட்போர் கூடத்தில் படையினருக்கான உரையொன்றினை நிகழ்த்திய தளபதி அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார். அதனையடுத்து வருகையின் நினைவாக மரக் கன்று ஒன்றை தளபதி நாட்டி வைத்ததோடு 55 வது படைப்பிரிவின் பொறுப்புகள் தொடர்பாக படைப்பிரிவு தளபதியால் விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைத் தளபதி சுண்டிகுளம் பகுதிக்கும் 553 வது பிரிகேட், 10 வது (தொ) விஜயபாகு காலாட் படை பெரியபச்சிபலை பயிற்சி பாடசாலை மற்றும் பருத்திதுறை 551 வது பிரிகேட் ஆகியவற்றுக்கும் விஜயம் மேற்கொண்டார்.
மேற்படி விஜயத்தின் போதான நிகழ்வுகளில் 55 வது படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.