20th July 2021 19:45:46 Hours
சமீபத்தில் நியமிக்கப்பட்ட மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாபா சமீபத்தில் கேகாலையில் உள்ள 611 வது பிரிகேட்டிற்கு விஜயம் செய்தார். படைப்பிரிவுக்கு
அதன் போது மேற்கு தளபதியினை முகாம் நுழைவாயிலில் 611 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக உடுவிட்ட வரவேற்றார்.
பின்னர், 611 வது பிரிகேட்டின் கட்டளையின் கீழுள்ள 8 வது இலங்கை சிங்க படை (எஸ்.எல்.எஸ்.ஆர்) மற்றும் 8 கெமுனு ஹேவா படை ஆகியவற்னை கட்டளை அதிகாரிகள் பாதுகாப்பு செயல் திட்டம், கொவிட் -19 இன் கட்டுப்பாடு தொடர்பான கடமைகள் போன்றவை குறித்து அன்றைய வருந்தினருக்கு விளக்கமளித்தனர். அவர் படைப்பிரிவில் அதிகாரயாணையற்றவளர்களுக்கு உரையாற்றுவதற்கு முன்பு விஜயத்தின் அடையாளமாக ஒரு மரக்கன்றினையும் நாட்டிவைத்தார்.
அவர் தனது பயணத்தின் ஒரு பகுதியாக, கேகாலை போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள இடைநிலை சிகிச்சை நிலையம் , ரம்புக்கன பிராண்டிக்ஸில் இடைநிலை சிகிச்சை நிலையம் மற்றும் தொழில்நுட்ப நிறுவன தனிமைப்படுத்தல் மையத்தில் ஆகியயவற்றை பார்வையிட்தைிடன் அங்கு பணியாற்றும் அதிகாரிகளுடன் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்.
பின்னர், வருகை தந்த மேற்கு தளபதி கோலை மாவட்ட செயலாளர் திரு மஹிந்த வீரசூரிய, மாவனெல்ல பிரதேச செயலாளர் திருமதி விஜயனி ரத்னசேகர, கேகாலை பிரதேச செயலாளர் திரு கே.ஜி.எஸ் நிஷாந்த, கேகாலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குமார் விக்ரமசிங்க பிராந்திய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கேகாலை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
கலந்துரையாடலின் முடிவில், மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா 8 வது சிங்க படையின் சேதன பசளை உற்பத்தி திட்டத்தையும் பார்வையிட்டார்.
61 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே , சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் விஜயத்துடன் தொடர்புபட்டனர்.