25th December 2021 09:14:03 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக புதிதாக நியமனம் பெற்றுகொண்டதன் பின்னர் மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள், கூரகல விகாரையின் நிர்மாண பணிகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான விஜயமொன்றை திங்கட்கிழமை (20) மேற்கொண்டிருந்தார்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால், வழங்கப்பட் அறிவுரைக்கமைய இராணுவத்தின் ஆளணி வளம் மற்றும் தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்தி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விஜயத்தின் போது, மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்கள் நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தின் தலைவரும் கூரகல விகாரையின் தலைமை தேரருமான வண. வத்துக்கும்புரே தர்மரதன தேரரருடன் விகாரையில் அடுத்தகட்ட நிர்மாண பணிகள் தொடர்பில் கலந்தாலோசித்ததோடு அவர்களிடமிருந்து ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.