Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th October 2021 19:07:12 Hours

புதிய மத்திய தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அலுவலக பணிகளை ஆரம்பிப்பு

இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் ஜெனரல் சமந்த சில்வா திங்கட்கிழமை (4) தியதலாவையில் அமைந்துள்ள மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கான அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். மேற்படி நியமனத்தை வகித்த மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட மேற்படி நிகழ்வின் போது சிரேஸ்ட அதிகாரிகளும் பங்குபற்றியிருந்ததோடு, நினைவு தூபி வளாகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு மத அனுட்டானங்களுக்கு முன்னர் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு வழங்கப்பட்டது.

அதனையடுத்து மேஜர் ஜெனரல் சமந்த சில்வா சேவைக்காலத்தின் போதான தனது பணிகள் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு எடுத்துரைத்ததோடு, இதன்போது இராணுவம் மற்றும் அதன் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கான பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அதனையடுத்து இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தது.

மேற்படி புதிய நியமனத்திற்கு முன்பாக மேஜர் ஜெனரல் சமந்த சில்வா இராணுவ தலைமையகத்தின் வழங்கல் பணிப்பாளர் நாயகமாக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் 11 வது படைப்பிரிவு மற்றும் 12 வது படைப்பிரிவு, 111 பிரிகேட், 112 பிரிகேட்,121 பிரிகேட்,122 பிரிகேட் தளபதிகள் மற்றும் அதன் கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.