13th August 2021 22:30:08 Hours
தொம்பகொடவில் உள்ள இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணி (SLAOC) தலைமையகத்தில் இராணுவ போர் கருவிகள் படையணியின் புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட இராணுவ தலைமையக போர் கருவிகள் சேவைப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த வீரசிங்க, அவர்களுக்கு இராணுவ மரியாதை மற்றும் அன்பான வாழ்த்துக்களை செவ்வாய்க்கிழமை (10) படையணி தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
புதிய படைத் தளபதி பிரிகேடியர் பிரியந்த வீரசிங்கவை நுழைவாயிலில் நிலையத் தளபதி பிரிகேடியர் அஜித் முனசிங்க அன்புடன் வரவேற்றதுடன் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
அதன்பிறகு, புதிய படைத் தளபதி தனது புதிய அலுவலகத்தில் வாழ்த்துக்களுக்கு மத்தியில் தனது அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சந்தன மாரசிங்கவிற்குப் பிறகு, இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணியின் 24 வது படைத் தளபதியாக பிரிகேடியர் பிரியந்த வீரசிங்க பதவியேற்றார்.