Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2021 17:55:46 Hours

புதிய புனர்வாழ்வு பணிப்பாளர் 'அபிமன்சல' புனர்வாழ்வு நலன்புரி நிலையத்திற்கு விஜயம்

புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக நியமனம் பெற்றுகொண்ட பிரிகேடியர் துஷான் சேனாரத்ன அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து குருணாகல் - பன்கொல்ல பகுதியில் அமைந்துள்ள அபிமன்சல புனர்வாழ்வு நிலையம் – 3 இல் பராமரிக்கப்படுவோரை செப்டெம்பர் 29 ம் திகதி சந்தித்து நலம் விசாரித்தார்.

இவ்விஜயத்தின் போது அவர், அங்கு பராமரிக்கப்படுவோரின் ஆரோக்கிய நிலைமைகள் மற்றும் சுக துக்கங்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பணிப்பகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.