Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st December 2021 18:53:22 Hours

புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அலுவலக கடமைகள் பொறுப்பேற்பு

இராணுவத்தின் புதிய பிரதி பதவிநிலை பிரதானியாக நியமனம் பெற்றுள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையின் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் செவ்வாய்க்கிழமை (21) இராணுவ தலைமையகத்தில் அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதன்போது மத அனுட்டானங்களுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

அலுவலகத்திற்கு வருகை தந்த அவர் பௌத்த மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டதோடு இந்நிகழ்வில், இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். மேற்படி நியமத்தை பெறுவதற்கு முன்பாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்கள் யாழ். பாதுகாப்பு படைத் தலைமைக தளபதியாக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் புதிய நியமனத்திற்கு முன்னர் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 26 வது தளபதியாக நியமனம் வகித்தார்.

அவர் 1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் ஒரு பயிலிளவல் அதிகாரியாக 26 ஆம் பாடநெறியில் இணைந்து, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரிகளில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்த பின்னர், அவர் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.

அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் போது, அவர் ஒரு வீரம் மிக்க காலாட்படை வீரராக பல்வேறுப்பட்ட நியமனங்களின் கீழான செயற்பாடுகளையும் திறம்பட செய்துள்ளார். அதனால் அவரது வாழ்க்கை முழுவதையும் ஓர் சிறந்த தளபதி, பயிற்றுவிப்பாளர் மற்றும் முழுமையான பணிநிலை அதிகாரியாக சேவையாற்றுவதற்காக அர்பணித்துள்ளார்.

ஆரம்பத்தில் 3,6 மற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணிகளின் குழு மற்றும் அணி கட்டளை அதிகாரிகயாக சேவையாற்றிய அவர் முன்மாதிரியான தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்தியவர். பின்னர் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியாகவும் நியமனம் பெற்றார். இந்த நியமனங்களின் போது தகைமை மிகுத்த , தந்திரோபாய மற்றும் மூலோபாய திட்டமிடல்களை வகுக்கும் நிபுணத்துவம் கொண்டவராகவும் பல திட்டங்களை வெற்றிகரமானதாக மாற்றியுள்ளார்.

அதேநேரத்தில் அவர் 532 மற்றும் 512 பிரிகேடுகளின் தளபதியாகவும் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பணி நிலை அதிகாரியாக பல்வேறு நியமனங்களை வகித்துள்ள அவர் இராணுவ தலைமையகத்திலும் முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். உளவியல் செயற்பாடுகளுக்கான பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2, பொதுப்பணி பணிப்பகத்தில் பணி நிலை அதிகாரி 1 மற்றும் ஆளணி பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 1 ஆகிய குறிப்பிடத்தக்க பல நியமனங்களை வகித்துள்ள அவர் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியாக செயற்பட்டுள்ளதோடு படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான நலன்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

அதேபோல் அவர் இலங்கையின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளராகவும் கொங்கோ நாட்டின் இலங்கை இராணுவத்தின் முதலாவது கண்காணிப்பாளர் என்ற பெருமையையும் பெற்றவர். ஈரான் இஸ்லாமியக் குடியரசில் அமைதி காக்கும் பயிற்சிப் அமர்வுகளிலும் பங்கேற்றுள்ள அவர், இலங்கை காலாட் படை பயிற்சி முகாம், இலங்கை இராணுவ அமைதிகாக்கும் பயிற்சி கல்லூரி ஆகியவைகளின் கட்டளைத் தளபதியாக பணியாற்றும் வாய்ப்புக்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்பதோடு மனித வள முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டமும் மனித வள அபிவிருத்தியில் முதுகலைப் டிப்ளோமாவும் பெற்றுள்ளார். அவர் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் போர் தீர்வு மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளில் முதுகலை டிப்ளமோ பெற்றுள்ளார். அவர் ஒரு தொழில்முறை ஆலோசகர் மற்றும் உளவியல் ஆய்வுகள் நிறுவனத்தில் இருந்து வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் மேம்பாட்டிற்கான சான்றிதழைகளையும் பெற்றுள்ளார்.

அவரது பேச்சுத்திறன் காரணமாக திறன் காரணமாக, அவருக்கு இலங்கை தொழில் ஆலோசகர்கள் நிறுவனத்தில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஆசிய பசிபிக் மையத்தில் உள்ள பாதுகாப்பு ஆய்வுகள் கல்லூரியின் புகழ்பெற்ற பட்டதாரியான அவர், அங்கு அவர் விரிவான நெருக்கடியான சூழல்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பிலான கற்கைகளிலும் பட்டம் பெற்றுள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெற்றுக்கொண்ட பல்வேறு பயிற்சிகளின் மூலம் மகத்தான அனுபவங்களை பெற்றுள்ளார். அவர் இந்தோனேசியா குடியரசின் தேசிய மீட்சி நிறுவனத்தில் மூலோபாயம் மற்றும் மீட்டல் ஆய்வுகளின் பின்னர் முதுமாணி பட்டம் பெற்றுள்ளதோடு, மங்கோலியாவில் உள்ள பசுபிக் சிறப்பு கூட்டு நடவடிக்கை பல்கலைக்கழகத்தின் மங்கோலிய ஆயுதப்படைகளின் சிறப்பு கட்டளை நடவடிக்கைகள் மற்றும் பசுபிக் வலயத்திற்கான பாதுகாப்புத் துறை பணிக்குழுவின் பயிற்சி நடவடிக்கைகளிலும் அவர் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேஜர் ஜெனரல் கொடிதுவாக்கு தனது சிறப்புமிக்க நடத்தை, துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் நம்பகதன்மை ஆகியவற்றிற்காக பல பதக்கங்கள் மற்றும் கௌரவங்களயும் பெற்றுள்ளார். ரண விக்கிரம பத்தகம், ரண சூர பதக்கம், தேசபுத்திர பதக்கம்,வடக்கு கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வன்னி மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம், மூன்று கொலுசுகளுடன் கூடிய ரிவிரெச போர்கல சேவை பதக்கம், 50 வது ஆண்டு இலங்கை இராணுவ பதக்கம், 50 வது ஆண்டு சுதந்திர இலங்கை பதக்கம். , இலங்கை ஆயுத சேவைகள் மற்றும் நீண்ட சேவைக்கான பதக்கம், கொங்கோ ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர் பதக்கம், விதேச சேவா பதக்கம், சேவாபிமானி பதக்கம் மற்றும் பெசசும் சேவா பதக்கம் ஆகியவகையை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் தற்போது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியாக நியமனம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.