17th January 2025 15:15:15 Hours
மேஜர் ஜெனரல் ஜீ.எல்.எஸ்.டபிள்யூ லியனகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 12 வது பிரதம சமிக்ஞை அதிகாரியாக 2025 ஜனவரி 15 அன்று இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற எளிய நிழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.
நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய நியமனத்தை முறையாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றிய அவர், எதிர்காலத்திற்கான தனது தொலைநோக்குப் பார்வையை விளக்கினார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.