Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2019 21:44:20 Hours

புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிற்கான வரவேற்பு

கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்திற்கு புதிதாக பதவியேற்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான கௌரவ சமல் ராஜபக்ச அவர்கள் இன்று காலை (29) மத வழிபாடுகள் பாதுகாப்பு செயலாளர் அமைச்சர்கள் முப்படைத் தளபதிகள் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் போன்றோரின் பங்களிப்புடன் வருகை தந்தார்.

இவ்வாறு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்களை பாதுகாப்பு செயலாளரான மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்தின அவர்கள் வரவேற்றார். இதன் போது மங்கள விளக்கேற்றல் நிகழ்வானது பாதுகாப்பு செயலாளர் முப்படைத் தளபதிகள் பொலிஸ் திணைக்கள அதிகாரிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் போன்றோரின் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது செத் பிரித் வழிபாடுகள் மதிப்பிற்குறிய நாயக்க தேரர் இத்ததெமாலியே இந்திரசார நாயக்க தேரர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன் இந் நிகழ்வுகளின் இறுதியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தை அதிதிகள் புத்தகத்தில் இட்டுச் சென்றார்.

அதன் பின்னர் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் முப்படைத் தளபதிகள் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலக அதிகாரிகள் போன்றோரின் பங்களிப்போடு கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலானது மேற்கொள்ளப்பட்தோடு இதன் போது உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரவர்கள் தேசத்திற்காக அனைவரதும் ஒத்துழைப்புடன் சேவையாற்றுமாறு தெரிவித்தார். Sports brands | Air Jordan