Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2020 19:05:51 Hours

புதிய படைத் தளபதி 5 ஆவதுபடைக்கல சிறப்பணி தலைமையத்திற்குவிஜயம்

இலங்கை படைக்கல சிறப்பணியின் படைத் தளபதிமேஜர் ஜெனரல் பிரதாப் திலகரத்ன அவர்கள் அண்மையில் பதவியேற்ற பின் ஜூலை 10 ஆம் திகதி பாங்கொல்லயில் அமைந்துள்ள 5 ஆவதுபடைக்கல சிறப்பணிதலைமையகத்திற்கு முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை இப்படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

புதிய படைத் தளபதி அவர்கள் இந்த படையணியின் 6 ஆவது கட்டளை அதிகாரியாக முன்னர் கடமை வகித்துள்ளார். அத்துடன் தற்போதைய கட்டளை அதிகாரி தற்போதைய படையணியின் புதிய நிலவரம் குறித்து புதிய படைத் தளபதிக்கு விளக்கமளித்தார்.

ஆரம்பத்தில் இருந்தே இப் படையணியின் தரத்தை உயர்த்த அவர்களின் கடின உழைப்புக்காக இப் புதிய படைத் தளபதி அனைத்து கட்டளை அதிகாரிகளுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.அத்துடன் படையினர்களுக்கான உரையில், யுத்தத்தில்உயிர் நீத்த அனைத்து வீரர்களுக்கும், காயமடைந்த வீரர்களுக்கும் தேசத்திற்கு அளித்த மகத்தான பங்களிப்புக்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த படையணியின் வளர்ச்சிக்காக பாடு பட்ட முன்னாள் கட்டளை அதிகாரிகளுக்கு புதிய படைத் தளபதி அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு நாட்டின் அர்ப்பணிப்பிற்காக உயிர்களை நீத்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்து தேசத்திற்காக அவயங்களை இழந்த படையினர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

பின்னர் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.bridgemedia | Air Jordan Release Dates 2020