Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2019 18:05:27 Hours

புதிய தகவல் தொழிநுட்ப பணிப்பாளர் பதவி நியமனம்

தகவல் தொழிநுட்ப பணியகத்திற்கு புதிய தகவல் தொழிநுட்ப பணிப்பாளராக பிரகேடியர் அசோக் பீரிஸ் அவர்கள் (27) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பதவி நியமனம் பெற்றார்.

புதிதாக பதவி நியமனம் பெற்ற பிரிகேடியர் அசோக் பீரிஸ் அவர்களுக்கு மகா சங்க உறுப்பினர்களால் புதிய அலுவலகத்தில் வைத்து மத ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து அவர் உத்தியோகபூர்வ ஆவனத்தில் தனது கையொப்பத்தையிட்டு புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டார். பின்னர், அவர் தனது புதிய அலுவலகத்தின் பங்களிப்பு மற்றும் பணிகள் தொடர்பாக சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். best Running shoes brand | Sneakers