Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th August 2022 20:37:53 Hours

புதிய காலாட் படை பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா அவர்கள் காலாட் படை பணிப்பகத்தின் 22வது பணிப்பாளர் நாயகமாக வியாழக்கிழமை (04) இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

நடைபெற்ற மத அனுஷ்டானங்களுக்குப் பிறகு, புதிதாக நியமிக்கப்பட்ட காலாட் படை பணிப்பாளர் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பமிட்டார். இந்த புதிய நியமனத்திற்கு முன், அவர் பாதுகாப்பு பிரதானி அலுவலகத்தில் பொதுப் பணி பணிப்பாளராக பணியாற்றினார்.

பணிப்பகத்தின் பதவிநிலை அதிகாரிகள் மற்றும் படையினர் இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர் மேஜர் ஜெனரல் தம்மி ஹெவகே இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதனை அடுத்து இப்பதவியில் பதவியேற்றார்.