Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th July 2021 06:46:05 Hours

புதிய இராணுவ பதவி நிலை பிரதானிக்கு தளபதி வாழ்த்து

இராணுவத்தின் புதிய தளபதியாக நியமனம் பெற்றுக்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவருக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொள்வதற்கான இராணுவ தளபதியின் அலுவலகத்திற்கு அழைப்பிக்கப்பட்டிருந்தோடு, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடமிருந்து வியாழக்கிழமை (15) அக்கடிதத்தினை பெற்றுக்கொண்டார்.

மேற்படி சந்திப்பின் போது மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா 2020 – 2025 வரையான காலப்பகுதிக்கான இராணுவத்தின் முன்னோக்கு மூலோபாய திட்டத்திற்கமைய அதிகாரிகளுக்கான பயிற்சிகளை மேம்படுத்தல் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சந்திப்பின் நிறைவில் இராணுவ தளபதி புதிய அதிகாரிக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

இராணுவத்தின் 58 வது பதவி நிலை பிரதானியாக நியமனம் பெறுவதற்கு முன்பாக மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.