Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 21:10:15 Hours

புதிய இராணுவ பதவிநிலைப் பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலைப் பிரதானியாக இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இன்று (ஜூலை 15) முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூஅவர்களுக்குப் பின் இப் பதவியை பெற்றுக கொண்டார்.

இந்த நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவத்தின் பதவிநிலைப் பிரதானியாகவும், கொஸ்கம இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தலைமையகத்தின் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது, சிரேஷ்ட அதிகாரி இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியாக கடமைகளை ஆற்றி வருகிறார். இவர் 16 ஆகஸ்ட் 1988 - 15 நவம்பர் 1991 வரை இராணுவத் தளபதியாக பணியாற்றிய ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க வீஎஸ்வீ (ஓய்வு) அவர்களின் மூத்த மகன் ஆவார்.