Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th November 2019 15:13:26 Hours

புதிய இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் நவில் வீரசிங்க பதவியேற்பு

இலங்கை பொறியியலாளர் படையணியைச்சேர்ந்த மேஜர் ஜெனரல் நவில் வீரசிங்க அவர்கள் 29ஆவது இலங்கை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக திங்கற்கிழமை 4ஆம் திகதி தனது கடமையினை இராணுவத் தலைமையகத்திலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் இவர் மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

அதனைத் தொடந்து புதிய இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமவர்கள் சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் இந்நியமனத்திற்கு முன்னர் திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிரேஷ்ட அதிகாரிகள், கேணல் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், மற்றும் பதவிநிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். affiliate tracking url | Nike