Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2021 12:30:04 Hours

புதிதாக பதவி உயர்வு பெற்ற சிரேஸ்ட கெட்டரியன் அதிகாரிக்கு பாராட்டு

சாலியாபுரவில் உள்ள 'கஜாபாவின் வீடு' அதன் பதவி உயர்வு பெற்ற 61 பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹவகே அவர்களை பாராட்டும் நிகழ்வை சனிக்கிழமை (06) நடத்தியது.

இதன்போது, கஜபா படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் , பிரிகேடியர் தினேஷ் உடுகம அவர்களினால் பிரதம விருந்தினராக் அழைக்கப்பட்ட பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும், இராணுவ ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன், கஜபா படைப்பிரிவின் பிரதான நுழைவாயிலில் காவலர் முன்னரங்கு மதியாதையும் வழங்கப்பட்டது.

பின்னர் படைப்பிரிவு வளாகத்திற்கு வருகைத் பிரதம விருந்தினர் போரினால் உயிரிழந்த வீரர்களின் நினைவுத் தூபிக்கு முன்னால் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் மலர் வளையங்களை வைத்து நினைவு கூர்ந்த பின்னர் படையினரால் காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

மே 2009 க்கு முன்னர் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த பெருமளவில் பங்களித்த மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே அவர்களுக்கு படையிணர் அணிவகுப்பு மரியாதை செலுத்திய பின்னர் போர்க்களத்தில் அவரது துணிச்சலை பாராட்டு வகையில் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அதனையடுத்து நிகழ்சியின் நிறைவாக அனைத்து நிலைகளுக்குமான விருந்துபசாரத்திலும் கலந்துக்கொள்ள அழைக்கப்பட்டார். Running Sneakers Store | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ