Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th June 2019 09:45:45 Hours

புதிதாக பதவிஉயர்வு பெற்ற பீரங்கி படை மேஜர் ஜெனரல் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு

இலங்கை பீரங்கிப் படையணியின் புதிதாக பதவிஉயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஏ எஸ் ஆரியசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் டபிள்யூ டீ சி கே கொஸ்தா போன்றோர்களுக்கான வரவேற்பு அணிவகுப்பு மரியாதை நிகழ்வானது கடந்த வெள்ளிக் கிழமை (07) பனாகொடை பீரங்கிப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

இதன் போது பல அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோர் ஒன்றிணைந்து புதிய பீரங்கிப் படை ஜெனரல் அவர்களை வரவேற்றனர். இதன் போது; உயிர் நீத்த பீரங்கிப் படையணியின் படையினரை நினைவு கூறும் நிகழ்வு இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து இராணுவ அணிவகுப்பு நிகழ்வுகள் போன்றனவும் படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வின் இறுதியில் அதிகாரிகளுடனான குழுப்புகைப்படமும் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து படையினருக்குமான மதிய உணவு போன்றன 06ஆவது பீரங்கிப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது. Authentic Nike Sneakers | Sneaker & Lifestyle News