17th August 2021 17:00:43 Hours
புதிதாக நிலை உயர்வு பெற்றதையிட்டு மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பற்கான நிகழ்வொன்று செவ்வாய்க்கிழமை (10) ஒட்டுசுட்டான் 64 வது படைப்பிரிவு தலைமையகத்தின் படையினரால் வாழ்த்து நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது 23 வது விஜயபாகு காலாட் படையினரால் 64 படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை மற்றும் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வின் நிறைவசம்சமாக அணிவகுப்பு மைதான முன்றலில் புதிய தளபதியினால் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், 64 படைப்பிரிவு தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.